தளபதி விஜயின் இரண்டு சூப்பர் ஹிட் படங்களை தவற விட்டுள்ளார் நடிகை ஜோதிகா.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஜோதிகா. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து வந்த இவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்த இவர் தற்போது மீண்டும் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது நடிகை ஜோதிகா தவறவிட்ட தளபதி விஜய் திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது, விஜய் சூர்யா இணைந்து நடித்த பிரண்ட்ஸ் திரைப்படத்தில் முதலில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா தான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன் பிறகு இந்த படத்தால் நடிக்க முடியாமல் போனது.

பின்னர் தளபதி விஜய் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்னர் வெளியான மக்கள் திரைப்படத்தில் நித்யா மேனன் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். ஆனால் திடீரென இறுதி கட்டத்தில் இந்த பட வாய்ப்பையும் நிராகரித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.