Jyothika Film : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Suriya, NGK Film, dream warrior pictures

Jyothika Film :

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே. நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும்,

முதல்முறையாக செல்வா -சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.

முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு நடிகைகள் – தளபதி 64 படத்தால் அடித்த ஜாக்பாட்.!

இதைத்தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இத்திரைப்படம் அண்மையில் திரைக்கு வந்தது. ஆனால் ரசிகர்களிடம் இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.

பாக்ஸ் ஆபீஸிலும் படம் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் டிரீம் வாரியர்ஸ் நிறுவனத்திற்கு இப்படம் பல கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுத்தியுள்ளது.

விஜய், அஜித்துடன் புதிய படம் எப்போது? – செல்வராகவன் அதிரடி பேச்சு.!

இதை ஈடுகட்ட ஜோதிகா நடிப்பில் அவர்கள் தயாரித்து வரும் ராட்சசி படத்தை என்.ஜி.கே வினியோகஸ்தர்களுக்கு இலவசமாக கொடுக்க அந்நிறுவனம் முன்வந்துள்ளதாம். இதன்மூலம் என்.ஜி.கே படத்துக்காக திருப்பி தர வேண்டிய தொகையை ஈடு செய்யவுள்ளார்களாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.