சூர்யா-ஜோதிகா மிக சிறந்த நடிகர்கள். இவர்கள், ‘காக்க காக்க’ படத்தில் நடித்தபோது காதலிக்க தொடங்கினர்.
இதையடுத்து, கடந்த 2006-ம் ஆண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன் சூர்யாவை கரம்பிடித்தார் ஜோதிகா. சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே திருமணம் செய்துகொண்ட ஜோதிகா, திருமணத்துக்கு பின் சினிமாவில் இருந்து விலகினார். இதையடுத்து அவருக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் பிறந்தனர். இருவரும் வளர்ந்த பின்னர் மீண்டும் சினிமாவில் களமிறங்கினார் ஜோதிகா.
36 வயதினிலே படம் மூலம் தமிழ் சினிமாவில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார் ஜோ. அடுத்தடுத்து, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் ஜோதிகா, தனக்கு கதை பிடிக்கவில்லை என்றால், எந்த டாப் ஹீரோ படங்களாக இருந்தாலும் நோ சொல்லி விடுகிறார்.
அதேபோல், அட்லீ இயக்கிய ‘மெர்சல்’ படத்திலும் விஜய்க்கு மனைவியாக நடிக்க இருந்தது ஜோதிகா தான். ஆனால், அவருக்கு அந்த கேரக்டர் திருப்தி அளிக்காததால் அவர் விலக, அவருக்கு பதில் நித்யா மேனன் நடித்தார்.
இப்படி, கதை தேர்வில் கவனமாக இருக்கும் ஜோதிகா, கடந்த ஆண்டு மலையாளத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்த ‘காதல் தி கோர்’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதேபோல், இந்தியிலும் அவர் நடிப்பில் வெளிவந்த ‘ஷைத்தான்’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
மறுபுறம், ஜோதிகாவின் கணவர் சூர்யா, ‘கங்குவா’ என்கிற மாபெரும் வரலாற்று கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கியுள்ள இப்படம் வருகிற நவம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.
இதுதவிர, நடிகர் சூர்யா கைவசம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம், வெற்றிமாறனின் வாடிவாசல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரோலெக்ஸ் என பல திரைப்படங்கள் உள்ளன. இதுதவிர இந்தியிலும் ஒரு படத்தில் அவர் நடிக்க கமிட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி கணவன், மனைவி இருவரும் சினிமாவில் பிசியாக உள்ள நிலையில், இன்று அவர்கள் 18-வது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். அதற்காக சமூக வலைதளங்களில் சூர்யா, ஜோதிகா ஜோடிக்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது.
இதனிடையே, நடிகை ஜோதிகா, தன்னுடைய காதல் கணவர் சூர்யா செய்யும் விஷயங்களில் தன்னால் சகித்துகொள்ள முடியாத விஷயம் என்னவென்று ஓப்பனாக கூறி இருக்கிறார்.
அதன்படி, சூர்யாவிடம் தனக்கு மிகவும் பிடித்த விஷயங்கள் பற்றி முதலில் பேசிய ஜோதிகா, அவர் நட்புடன் தன்னுடன் பழகுவதும், தனக்கு நிறைய மரியாதை கொடுப்பார் அதுவும் மிக பிடிக்கும் என தெரிவித்த ஜோதிகா, அவர் செய்வதில் பொறுத்துக்கொள்ள முடியாத விஷயம் எது என்கிற கேள்விக்கு, அவர் பாத்ரூமில் அதிக நேரம் செலவிடுவார். அதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. அதற்காக டெய்லி காலை இருவருக்கும் சண்டை நடக்கும் என ஜாலியாக சிரித்தபடி கூறி இருக்கிறார்.
அப்டியா? பாத்ரூம் கூட, ஃபாரின் ஷூட் போலவோ? சூர்யா சார் விளக்கம் கொடுத்தால் தீர்வு தான்.!