Jyothika About Political Entry
Jyothika About Political Entry

அரசியலுக்கு வருவது குறித்து நடிகை ஜோதிகா தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.

Jyothika About Political Entry : தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா, ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் ஜோதிகா.

மேலும் இவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்ட ஜோதிகா தற்போது தனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார்.

கிராமத்திலிருந்து கருத்த குட்டியா சென்னைக்கு திரும்பிய மணிமேகலை – இப்போ எவ்வளவு கருப்பா ஆயிட்டாங்க பாருங்க!

அந்த வகையில் வரும் 29ம் தேதி ஜோதிகா நடிப்பில் பொன்மகள்வந்தாள் என்ற திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் பிரமோஷனுக்காக ஜோதிகா ஜும் ஆப் மூலமாக பத்திரிகையாளர்களை சந்தித்து வந்தார்.

அப்போது சமூக நல சேவை செய்யும் சிவகுமார் குடும்பத்திலிருந்து யாரும் அரசியலுக்கு வருவதில்லை. நீங்கள் அரசியலுக்கு வந்து தி நகர் தொகுதியில் போட்டியிட்டால் என்ன என கேட்டுள்ளனர்.

அதற்கு ஜோதிகா நல்லது செய்ய வேண்டும் என்றால் அரசியலுக்கு வர வேண்டும் என்ற அவசியம் இல்லை.

கோவில்கள் எதற்கு எனக் கூறினாரா? உண்மையில் ஜோதிகா பேசியது என்ன? – வீடியோவுடன் இதோ.!

நான் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டேன் என அவர் கூறியுள்ளார். மேலும் அரசியலில் இல்லாமல் இருந்தால் தான் மக்களுக்கு உதவ முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

விருது விழா ஒன்றில் ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் பற்றி பேசிய பேச்சு பெரும் சர்ச்சைக்குள்ளானது என்பதும் சூர்யா ஜோதிகா பேசிய பேச்சில் எந்த தவறும் இல்லை நாங்கள் எங்களுடைய கருத்தில் உறுதியாக உள்ளோம் என அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.