Jyothika About Mersal Movie

மெர்சல் படத்தில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தை கூறியுள்ளார் ஜோதிகா

Jyothika About Mersal Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியாகி வசூல் வேட்டையாடிய திரைப்படம் மெர்சல்.

இந்தப் படத்தில் தளபதி விஜய் அப்பா வெற்றிமாறன் மற்றும் மகன்களாக அஞ்சு ரூபா டாக்டர், மேஜிக் மேன் என மொத்தம் மூன்று வேடங்களில் நடித்திருந்தார்.

அப்பா வேடத்திற்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். நித்யா மேனனின் கதாபாத்திரம் படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் மட்டுமே இடம்பெறும். இருப்பினும் இந்த கதாபாத்திரம் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

Read This Also : காக்க காக்க படத்தில் நடிக்க இருந்தது சூர்யா இல்லை.. ஜோதிகா சிபாரிசு செய்தது யாரைத் தெரியுமா? – முதல் முறையாக வெளியான தகவல்

மேலும் காஜல் அகர்வால் சமந்தா ஆகியோரும் இந்த படத்தில் நாயகிகளாக நடித்து இருந்தனர். நித்யா மேனன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் அட்லி ஜோதிகாவை தான் அணுகினார்.

ஆனால் ஜோதிகா இப்படத்தில் நடிக்க மறுத்து விட்டார். இத்தனை வருடங்களுக்குப் பிறகு அதற்கான காரணம் என்ன என்பதை கூறியுள்ளார்.

தனது கதாபாத்திரத்தின் மீது இருந்த வேறுபாடு, கதை சொல்லும்போது ஸ்கிரிப்ட் மீது ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் காரணம், வேறு எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.