Justicia Adhatoda : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Justicia Adhatoda :

* ஆடாதொடை செடி நீண்ட, முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும், வெள்ளைநிற பூக்களுடன் 15 அடி வரை வளரக்கூடியது.

* ஆடாதொடை இலையின் சாறும் தேனும் சம அளவு எடுத்து கலந்து, சிறிது சர்க்கரையும் சேர்த்து தினமும் 4 வேளை குடித்து வந்தால், நுரையீரல் ரத்த வாந்தி, கோழை மிகுந்த மூச்சு திணறல், இருமல், ரத்தம் கலந்த கோழை போன்ற வியாதிகள் குணமாகும்.

* இவற்றை சிறு குழந்தைகளுக்கு 5 சொட்டும், 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு 10 சொட்டும், பெரியவர்களுக்கு 15 சொட்டும் என அளவாக கொடுத்தால் போதும்.

* ஆடாதொடையின் இலைச்சாற்றை 2 தேக்கரண்டி எடுத்து, அவற்றுடன் 1 டம்ளர் எருமைப் பாலை கலந்து 2 வேளை குடித்து வந்தால் சீதபேதி, ரத்த பேதி போன்றவை குணமாகும்.

* ஈரல் வலி குணமாக ஆடாதோடா இலைச் சாற்றை தேன் கலந்து அருந்தி வர குணமாகும்.

* ஆடாதொடை இலைச்சாற்றை தேன் கலந்து சாப்பிட்டு வர ஆஸ்த்மா குறையும், மூச்சுத்திணறல் குணமாகும்.

* ஆடாதோடை இலைகளை நறுக்கி நெய்யில் வதக்கி அதில் அக்கரகாரம்,சித்தரத்தை, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து தூள் செய்து போட்டு பொன் வறுவலாய் வறுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி அதில் சர்க்கரை சேர்த்துத் தேன் பதமாகக் காய்ச்சி வெந்நீரில் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குறையும்.

* ஆடாதொடைவேர், கண்டங்கத்திரி வேர் பொடி இவைகளை தேனில் கலந்து சாப்பிட்டு வர உடலில் ஏற்படும் குடைச்சல் வழியில் இருந்து தீர்வு கிடைக்கும்.

* மருதம்பட்டை,ஆடாதொடை பொடி இவற்றை வெள்ளாட்டுப் பாலில் கலந்து குடித்து வர நுரையீரலில் ஏற்பட்டுள்ள புண் சரியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here