Junior NTR Salary for Kotteshwaran Show

ஒரே ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ரூபாய் ஏழரைக் கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் பிரபல நடிகர் ஒருவர்.

Junior NTR Salary for Kotteshwaran Show : தமிழ் சின்னத்திரையில் அந்த நிகழ்ச்சிகளை வெள்ளித்திரையை சார்ந்த நடிகர்கள் தொகுத்து வழங்குவது என்பது வாடிக்கையாகி வருகிறது. இதுபோன்ற வெளித்தெரிய நடிகர்கள் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினால் டிஆர்பி பல மடங்கு எகிறும் என்பதால் இதனை விடாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.

இதன் காரணமாகத்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இதற்காக அவருக்கு 100 கோடிக்கு மேல் சம்பளம் கொடுக்கப் பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் நடிகர் சூர்யா தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி தான் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி. இந்தியில் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கினார். தெலுங்குவில் கோடீஸ்வரன் என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியை ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்க உள்ளார். இதற்காக அவருக்கு ரூபாய் ஏழரை கோடி சம்பளமாக பேசப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.