கேஜிஎஃப் இயக்குனரின் அடுத்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

Junior NTR Next Movie Announcement : கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யாஷ். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் கே ஜி எஃப். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

கேஜிஎஃப் இயக்குனரின் அடுத்த ஹீரோ இவர்தான்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பிரபாஸை வைத்து சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார் பிரசாந்த் நீல். அந்த படத்தை தொடர்ந்து இவர் ஜூனியர் என்டிஆருடன் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. தற்போது அது உண்மையாகியுள்ளது.

பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக ஜூனியர் என்டிஆர் நடிக்கும் உருவாகும் படத்தை இயக்க உள்ளார் பிரசாந்த் நீல். இன்று ஜூனியர் என்டிஆர் அவர்களின் பிறந்தநாள் என்பதால் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.