Julie With Som Sekhar

பிக் பாஸ் ஜூலியும் சோம் சேகரும் 7 வருடங்களுக்கு முன்பு எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Julie With Som Sekhar : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பிக் பாஸ். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி முடிவுக்கு வந்தது.

இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி‌. இந்த நிகழ்ச்சியின் மூலமாக இவர் தன்னுடைய பெயரை கெடுத்து கொண்டார். தற்போது வரை இவருக்கு ஹேட்டர்ஸ் அதிகமாகவே இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இவர் 7 வருடங்களுக்கு முன்பு எடுத்த ஒரு க்ரூப் போட்டோவை வெளியிட்டுள்ளார். இதில் பிக் பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்ட சோம் சேகரும் உள்ளார். இவர்கள் இருவரும் 7 வருடங்களாகவே நெருங்கிய நண்பர்களாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.