Bigg Boss Julie

Julie Tweet : என்னது நீயெல்லாம் பெண்ணா? என மகளிர் தின வாழ்த்து சொல்லி வாங்கி கட்டி கொண்டுள்ளார்.

மெரினா புரட்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் வீர தமிழச்சியாக பிரபலமானவர் ஜூலி. அதன் பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.

அதே சமயம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தன்னுடைய பெயரையும் டேமேஜ் செய்து கொண்டார்.

அதன் பின்னர் ஜூலி சமூக வளையதளங்களில் என்ன ட்வீட் செய்தாலும் ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொள்வதையே வாடிக்கையாக வைத்துள்ளார்.

தற்போதும் அப்படி தான் நேற்று மகளிர் தின வாழ்த்து கூறி ட்வீட் செய்துள்ளார். அந்த டீவீட்டில் பெண்ணாய் பிறந்ததற்காக பெருமை கொள்கிறேன். அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் நீயெல்லாம் பொண்ணா? என கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.