Julie Reaction to Haters

ஜூலி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆபாசமாக கமெண்ட் பதிவு செய்த நிலையில் அவர்களுக்கு ரசிகர் ஒருவர் தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

Julie Reaction to Haters : தமிழகத்தில் மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி.

அதன் பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றார்.

இருப்பினும் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து புகைப்படம் வெளியிட்டு பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் இவர் கவர்ச்சி உடையில் கையில் ஆட்டிட்யூட் என்ற புகைப்படத்தை வைத்து முன்னழகை மறைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த புகைப்படத்தில் இருந்த ஆட்டிட்யூட் என்ற வார்த்தையை ஆபாசமாக சித்தரித்து ரசிகர் ஒருவர் கமெண்ட் பதிவு செய்ய அதனை பலரும் ஷேர் செய்திருந்தனர்.

இப்படியான நிலையில் தற்போது பிக் பாஸ் ஜூலிக்கு ஆதரவாகவும் ஆபாச கமெண்டுகள் பதிவு செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரசிகர் ஒருவர் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஜூலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த ரசிகரின் பதிவிற்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.