Julie Photoshoot in Black
Julie Photoshoot in Black

கருப்பு நிற பெயின்ட் அடித்து கருகருவென மாறிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் ஜூலி.

Julie Photoshoot in Black : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை இந்த நிகழ்ச்சி மூன்று சீசன்களை நிறைவு செய்துள்ளது. விரைவில் நான்காவது சீசன் தொடங்க உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி. இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானார்.

உடல் முழுவதும் கருப்பு நிற பெயின்ட்.. முகம் சுழிக்கும் கவர்ச்சியில் மீரா மிதுன் – புகைப்படம் உள்ளே.!!

சமீபகாலமாக விதவிதமாக போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஜூலி. அந்த வகையில் தற்போது முகம் முழுவதும் கருப்பு நிற பெயிண்ட் அடித்து கருகருவென மாறிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள் பார்த்துமா மீரா மிதுன் என்னை பார்த்து காப்பி அடிச்சீட்டிங்கனு சொன்னாலும் சொல்லுவாங்க என கிண்டலடித்து வருகின்றனர்.

மேலும் சிலர் கருப்பு நிறம் கலர் தான் என்பதை நிரூபித்து விட்டீர்கள். செம அழகு எனவும் கூறி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்