Julie Emotional in BB Jodi

ஜல்லிக்கட்டுக்காக போராடிய அதே மெரினாவில் என் மூஞ்சில காரி துப்புனாங்க என பிக் பாஸ் ஜூலி கண்ணீர்விட்டு பேசியுள்ளார்.

Julie Emotional in BB Jodi : உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்களை நிறைவு செய்துள்ளது. இருப்பினும் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்ற ஜூலியை ரசிகர்கள் திட்டி தீர்ப்பது குறைந்தபாடில்லை.

அவர் என்ன புகைப்படம் வெளியிட்டாலும் எதைப்பற்றி பதிவிட்டாலும் ரசிகர்கள் அவரை திட்டித் தீர்ப்பதில் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனாலும் இதற்கெல்லாம் பெரியதாக ரியாக்ட் செய்யாத ஜூலி சில சமயங்களில் கடுப்பாகி பதிலடி கொடுத்து வருகிறார்.

தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் ஜோடி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சியில் ஒரு நாள் பேசும் போது எந்த மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்காக போராடினேனோ அதே மெரினாவில் என் முகத்தில் காரித் துப்பினாங்க என கண் கலங்கியபடி பேசியுள்ளார்.