Julie About Resign Her Job
Julie About Resign Her Job

நர்ஸ் வேலையை விட்டது ஏன் என ரசிகர் கேட்டதுக்கு பதில் அளித்துள்ளார் ஜூலி.

Julie About Resign Her Job : ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீர தமிழச்சியாக பிரபலமானவர் ஜூலி என்கிற ஜூலியானா. அதன்பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்துகொண்டு தன்னுடைய பெயரை முழுவதுமாக செய்து கொண்டார்.

கொரானா குறித்து பதிவிட்ட மஞ்சிமா மோகன்.. திட்டித் தீர்த்த ரசிகர் – நல்லது சொன்னது குத்தமா.!

இதனையடுத்து பிக் பாஸ் ஜூலி எதை செய்தாலும் ரசிகர்கள் அவரை திட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். சமீபகாலமாக அவரும் அது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் இவரிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் ஏன் நர்ஸ் வேலையை விட்டீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு ஜூலி நான் தற்போது நடிப்பில் பிசியாகி விட்டேன்.

இரண்டு வேலையையும் பார்ப்பது கடினம். சூட்டிங் எல்லாம் செல்வதால் நோயாளி எனக்காக காத்திருக்க வேண்டியது வரும். அதனால்தான் நான் அந்த வேலையை விட்டேன் என கூறியுள்ளார்.

நடிப்புக்காக நர்ஸ் வேலையை விட்டேன் என ஜூலி கூறியதை கேட்ட ரசிகர்கள் புனிதமான வேலையை விட்டுவிட்டு நடிக்க வந்தது சரியில்லை என அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.