Jp Natta About Edappadi Palanisamy

ஜெயலலிதா இல்லாமல் ஆட்சியை தக்க வைத்தது முதல்வர் பழனிச்சாமி ஆளுமையை வெளிக்காட்டுகிறது என பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பாராட்டு தெரிவித்துள்ளார்.

Jp Natta About Edappadi Palanisamy : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகும் அதிமுக தொடர்ந்து அதே வழியில் ஆட்சி செய்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வராக பதவி ஏற்பதும் மூன்றே மாதத்தில் ஆட்சி கவிழும் எனக் கூறியவர்கள் வாய் பிளக்கும் வகையில் நான்கு ஆண்டுகாலம் ஆட்சி செய்து சாதனை படைத்துள்ளது.

வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறி வருகின்றனர். இந்த நிலையில் துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கலந்து கொண்டார்.

அப்போது தமிழகம் கலாச்சாரத்துககு பெயர் போனது. இதனை வித்திட்டவர் திருவள்ளுவர். துக்ளக் என்றால் சோ ராமசாமி. சோ ராமசாமி என்றால் துக்ளக். தற்போது இந்த பத்திரிக்கையை வெற்றிகரமாக குருசாமி நடத்தி வருகிறார்.

தேர்தல் அறிக்கையில் வேளாண் சட்டங்களை வாக்குறுதிகளாக எதிர்க்கட்சிகளும் கொடுத்திருந்தன. ஆனால் தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருவதால் அதனை வைத்து அரசியல் செய்து வருகின்றனர் என குற்றம் சாட்டினார்.

மேலும் ஆளுமை மிக்க செல்வி ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் அதிமுக ஆட்சியை தக்க வைத்திருப்பது முதல்வர் பழனிசாமியின் ஆளுமையை காட்டுகிறது. இது எனக்கே வியப்பாகத்தான் இருக்கிறது என பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.