பூஜா ஹெக்டேவையே ஓரம் கட்டியுள்ளார் லிவிங்ஸ்டன் மகள்.

Jovitha Livingston Dance to Arabic Kuthu : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் பீஸ்ட்.

நெல்சன் திலீப் குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருந்த இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.

இந்த படத்தில் அரபிக் குத்துப் பாடலுக்கு விஜய்யுடன் சேர்ந்து ஆடிய டான்ஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில் தற்போது இவருக்கு டப் கொடுக்கும் வகையில் பிரபல நடிகரான லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா அரபிக் குத்து பாடலுக்கு செம ஆட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது. அப்படியே பூஜா ஹெக்டே ஆட்டத்தை பார்த்த மாதிரியே இருக்கு என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.