அடையாளமே தெரியாத அளவுக்கு கெட்டப் போட்டு போட்டோ ஷூட் செய்த பிரபல பாடகியான ஜோனிடா காந்தியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தற்போது பிரபல பின்னணி பாடகியாக திகழ்ந்து வருபவர் தான் ஜோனிடா காந்தி. இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, கன்னடம், போன்ற பல மொழியில் பாடல்களைப் பாடியுள்ளார்.இவர் சினிமா உலகிற்கு ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் என்ற படத்தின் பாடல் மூலம்தான் அறிமுகமானார். 

இவங்களா இது.?? - பாடகி ஜொனிடா காந்தியின் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!!

இதனைத் தொடர்ந்து தமிழில் ஓ காதல் கண்மணி, 24, கோலமாவு கோகிலா, வேலைக்காரன் போன்ற பல படங்களில் பாடியுள்ளார். தற்போது அனிருத் இசையில் அவரோடு இணைந்த ஜெனிட்டா காந்தி  செல்லம்மா, அரபிக் குத்து, பிரைவேட் பார்ட்டி போன்ற பாடல்களின் வீடியோவில் நடனத்துடன் க்யூட்டான எக்ஸ்பிரஷன் களை கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார்.

இவங்களா இது.?? - பாடகி ஜொனிடா காந்தியின் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!!

இதை அடுத்து விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வாக்கிங்/டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் இவர் வித்தியாசமான கெட்டப்பில் போட்டோ ஷூட் செய்திருக்கிறார்.  அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.