அஜித்துக்கு வில்லனாக அடுத்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார் பிரபல நடிகர்.

John Kokken Confirm Ajith 61 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் நடிப்பில் உருவாகி வரும் அஜித் 61 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அஜித்துக்கு வில்லனாக நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர்.. வைரலாகும் பதிவு - தல 61 செம கூட்டணி தான்.!!

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். இதனை அவரும் ஒரு பேட்டியில் உறுதி செய்திருந்தார். மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக சார்பட்டா பரம்பரை பட புகழ் ஜான் கொக்கன் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் இதனை ஜான் கொக்கன் உறுதி செய்துள்ளார்.

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சிரித்த முகத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கனவு நனவாகிறது. சிரிப்புக்குப் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா என பதிவு செய்துள்ளார். ஆனால் இவர் அஜித்துக்கு வில்லனாக நடிப்பது உறுதியாகி விட்ட தாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அஜித்துக்கு வில்லனாக நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர்.. வைரலாகும் பதிவு - தல 61 செம கூட்டணி தான்.!!

இதோ அந்த பதிவு