Jithan Ramesh Trolls to Archana

எனக்கே பயமாயிருக்கு என அர்ச்சனாவை பங்கமாக கலாய்த்து உள்ளார் ஜித்தன் ரமேஷ்.

Jithan Ramesh Trolls to Archana : தமிழ் சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் அர்ச்சனா. இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசனில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றார்.

இதனையடுத்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இது சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் எலி மூஞ்சி போல போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ஜித்தன் ரமேஷ் எனக்கு பயமா இருக்கு என அர்ச்சனாவை பங்கமாக கலாய்த்துள்ளார்.