Jimikki Kammal Serial

Jimikki Kammal Serial : சன் நெட்ஒர்க்கின் சேனல்களில் ஒன்றான சன் லைஃப் தற்போது புத்தம் புது பொலிவுகளுடன் சீரியல், ரியாலிட்டி ஷோ என வித்தியாச வித்தியாசமாக நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சேனலில் ஜிமிக்கி கம்மல் என்ற சீரியல் ஒன்றும் ஒளிபரப்பாகி வருகிறது.

நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் வகையில் இந்த சீரியல் உருவாகி உள்ளது. திரையுலகில் வலம் வந்த பிரபல நடிகர்கள் பலர் இந்த சீரியலில் இணைந்து நடித்துள்ளனர்.

குறிப்பாக நடிகர் லிவிங்ஸ்டன், ஸ்டண்ட் மாஸ்டர் தளபதி தினேஷ், காமெடி நடிகர் அணு மோகன் ஆகியோர் இந்த சீரியலில் நடித்துள்ளனர்.

திங்கள் முதல் சனி வரை இரவு 8 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here