Jillunu Oru Kadhal Movie Secrets :
Jillunu Oru Kadhal Movie Secrets :

ஜில்லுனு ஒரு காதல் படத்தில் பூமிகா வேடத்தில் நடிக்க இருந்தது யார் என்பது தெரியவந்துள்ளது.

Jillunu Oru Kadhal Movie Secrets : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படங்களில் ஒன்று ஜில்லுனு ஒரு காதல்.

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா பூமிகா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி 14 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் சூர்யா ரசிகர்களை உற்சாகமாக அதனை கொண்டாடி வருகின்றனர்.

10 நடிகர்கள் நிராகரித்த கதையில் நடித்த சூர்யா.. படம் படு மாஸ் ஹிட் – என்ன படம் தெரியுமா?

அதே சமயம் இந்த படம் பற்றிய ரகசிய தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது இந்தப்படத்தில் பூமிகாவுக்கு பதிலாக நடிக்க இருந்தது யார் என்பதும் தெரிய வந்துள்ளது.

ஆம், இப்படத்தில் முதலில் பூமிகாவுக்கு பதிலாக நடிகை அசின் தான் நடிக்க இருந்துள்ளார். அப்போது அவர் மற்ற படங்களில் பிசியாக இருந்ததால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போயுள்ளது.

இதனையடுத்து தான் இந்த வாய்ப்பு தனக்கு வந்ததாக பூமிகா அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.