Jiivi Movie Review : Plus and Minus of Jiivi Movie.! | jiivi Movie | Vetri | Karunakaran | Maim Gopi | Kollywood Cinema News | Tamil Cinema News
வி. ஜே கோபிநாத் இயக்கத்தில் வெற்றி, கருணாகரன், மைம் கோபி, மோனிகா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள ஜீவி திரைப்படதின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Jiivi Movie Review :

படத்தின் கதைக்களம் :

வெற்றியும் கருணாகரனும் ஒரே கடையில் வேலை பார்க்கும் ரூம் மேட்ஸ். ஏழ்மையின் விரக்தியில் இருக்கும் இவர்கள் இருவரும் சேர்ந்து வீட்டு ஓனரின் நகைகளை திருட முயற்சிக்கின்றனர். அதன் பின்னர் என்னவெல்லாம் நடக்கிறது? இவர்களின் நிலைமை என்ன ஆனது என்பது தான் வித்தியாசமான திரைக்கதை கொண்ட இப்படத்தின் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

வெற்றி 8 தோட்டாக்கள் படத்திலேயே தயக்கம் இல்லாத ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தில் அதைவிட சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.

கருணாகரன் காட்சிகளை விவரிக்கும் விதமும் அவருடைய நடிப்பும் சூப்பர், அவருக்கு இனி தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடம் கிடைக்கும் என நம்பலாம்.

மோனிகா, மைம் கோபி என மற்றவர்களின் நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது.

கதை பழசு தான் ஆனால்? – சிந்து பாத் விமர்சனம்.!

தொழில்நுட்பம் :

இசை :

கே.எஸ் சுந்தரமூர்த்தியின் இசை படத்தை மேலும் மெருகேற்றியுள்ளது.

ஒளிப்பதிவு :

பிரவீன் குமாரின் ஒளிப்பதிவு படத்தின் பலன் என்று கூறலாம். ஒரு ரூமிற்குள்ளவே பல காட்சிகள் என்றாலும் அதனை துளியும் போர் இல்லாமல் கொண்டு சென்றிருப்பது சிறப்பு.

எடிட்டிங் :

பிரவீன் கே.எல்-ன் எடிட்டிங் கனகச்சிதம், கதைக்கு என்ன தேவையோ அதை அழகான கோர்வையாக கொடுத்து படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளார்.

இயக்கம் :

கோபிநாத்திற்கு இது அறிமுக படம் தான், ஆனால் படத்தை பார்ப்பவர்களுக்கு நிச்சயம் அப்படியான உணர்வு வராத அளவிற்கு அபாரமான கதை சிந்தனையுடன் படத்தை கொண்டு சென்றுள்ளார்.

ஒரு சாதாரன ரசிகனுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு கூட அவர்களே படத்தில் பதில் வைத்திருப்பது அற்புதமான ஒன்று.

மாறுபட்ட திரைக்கதை, ஆழமான அர்த்தமுள்ள வசனங்கள் என அனைத்திலும் 100% ஸ்கோர் செய்துள்ளார். யாரும் எதிர்பார்க்காத கிளைமேக்ஸால் நம்மை ஒட்டு மொத்தமாக கவர்ந்து விட்டார்.

தம்ப்ஸ் அப் :

1. படத்தின் கதை
2. திரைக்கதை
3. வசனங்கள்
4. ஒளிப்பதிவு
5. படத்தின் கிளைமேக்ஸ்
6. வெற்றி, கருணாகரனின் நடிப்பு

மொத்தத்தில் ஜீவி தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here