சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படத்தில் தளபதி விஜய் நடிப்பார் என அறிவித்துள்ளார் நடிகர் ஜீவா.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தினை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் தற்போது ஆஹா OTT பிளாட்பார்ம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது விஜயின் புதிய படம் பற்றி பேசியுள்ளார்.

அதாவது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படத்தில் தளபதி விஜய் நடிப்பார் என்று தெரிவித்துள்ளார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த படத்தில் ஜீவாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.