Johnny Review

Jhonny Tamil Review : வெற்றி செல்வன் இயக்கத்தில் தியாகராஜன் கதை, திரைக்கதை மற்றும் தயாரிப்பில் பிரஷாந்த், சஞ்சிதா ஷெட்டி, பிரபு, ஆனந்த் ராஜ், தேவ தர்சினி ஆகியோரின் நடிப்பில் உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் ஜானி.

கதைக்களம் :

டாப் ஸ்டார் பிரஷாந்த் ஜானி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரசாந்த் ஒரு கள்ள நோட்டு கும்பலில் சிக்கி கொள்கிறார்.

இதனையடுத்து எதிர்பாராத விதமாக படத்தின் நாயகியான சஞ்சிதா ஷெட்டியின் இந்த கும்பலில் சிக்கி கொள்கிறார்.

இவர்களிடம் இருந்து பிரஷாந்த் எப்படி தப்பிக்கிறார்? சஞ்சிதா செட்டியையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் இப்படத்தின் மீது விறுவிறுப்பான கதையும் களமும்.

பிரஷாந்த் :

எப்போதுமே திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வரும் பிரஷாந்த் இந்த படத்திலும் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளார். ரொமான்ஸ், ஆக்ஷன் என அனைத்திலும் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

சஞ்சிதா ஷெட்டி :

சஞ்சிதா ஷெட்டி தன்னுடைய அழகான துள்ளலான நடிப்பால் படத்தை மேலும் மெருகேற்றியுள்ளார்.

பிரபு, ஆனந்த ராஜ், தேவ தர்ஷினி :

பிரபு இந்த படத்திற்கு என்ன தேவையோ அதனை கச்சிதமாகவும் எதார்தமாகவும் வெளிப்படுத்தியுள்ளார், அதே போல ஆனந்த ராஜ் மற்றும் தேவ தர்ஷினியின் காமெடிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

தொழில்நுட்பம் :

இசை :

ரஞ்சன் துரையின் பின்னணி இசை படத்திற்கு பெரிய அளவில் பலம் சேர்த்துள்ளது, பாடல்கள் இல்லை என்ற குறை தெரியாத அளவிற்கு பின்னணி இசை அமைந்துள்ளது.

ஒளிப்பதிவு :

பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவு படத்தை மிகவும் தெளிவாகவும் கச்சிதமாகவும் உருவாக உதவியாக அமைந்துள்ளது.

எடிட்டிங் :

சரவணன் என்பவர் இப்படத்திற்கு எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். படத்திற்கு என்னனென்ன காட்சிகள் தேவையோ அவை அனைத்தையும் சரியாக தொகுத்து கொடுத்துள்ளார்.

சண்டை காட்சிகள் :

சண்டை காட்சிகளை கவனித்துள்ள சுப்ரீம் சுந்தர் பிரசாந்தை வைத்து அழகாக தன்னுடைய பணிகளை முடித்து கொடுத்துள்ளார்.

இயக்குனர் :

இப்படத்தின் இயக்குனரான வெற்றி செல்வன் ஏற்கனவே ஒரு சில படங்களில் துணை இயக்குனராக பணியாற்றி இருப்பதால் படத்தை விறுவிறுப்பு குறையாக இயக்கியுள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. பிரசாந்தின் அசத்தலான நடிப்பு
2. பிரபுவின் எதார்த்தமான நடிப்பு
3. தேவ தர்ஷினி மற்றும் ஆனந்த ராஜின் காமெடி கலாட்டா

தம்ப்ஸ் டவுன் :

1. படத்தில் பாடல் இல்லை ஆனாலும் அந்த குறை தெரியாமல் படத்தை உருவாக்கியுள்ளனர் படக்குழு.

YouTube video

REVIEW OVERVIEW
ஜானி விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
jhonny-tamil-reviewமொத்தத்தில் ஜானி இளைஞர்களுக்கு பிடித்த படமாக இருக்கும்.