தனுஷுக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன் என்று மறுப்பு கூறிய பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் அளித்த பதிலால் திரை வட்டாரத்தில் சலசலப்பு எழுந்துள்ளது.

Jhanvi Kapoor Rejects Dhanush Movie : நடிகர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல முகம் கொண்ட தனுஷ் இவர் தொடர்ந்து வரிசையாக பல படங்கள் நடித்து கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து சில படங்கள் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தனுஷ் புதிய படம் ஒன்றை அவரே இயக்கி அதில் ஹீரோவாகவும் நடிக்க இருக்கிறார்.

தனுஷ் படத்திற்கு மறுப்பு கூறிய பாலிவுட் நடிகை-இதனால் திரை வட்டாரத்தில் சலசலப்பு.

இந்த படத்திற்கு அன்புச்செழியன் அவர்கள் தயாரிப்பாளராக இருக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. இதனைத் தொடர்ந்து இப்படத்திற்கான கதாநாயகியை தேடும் பணியில் இருந்தனர்.

இந்நிலையில் பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர் மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவி இவர்களின் மகளான ஜான்வி கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர் அப்போது தனுஷுடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்று அவர் பதிலளித்துள்ளார்.

தனுஷ் படத்திற்கு மறுப்பு கூறிய பாலிவுட் நடிகை-இதனால் திரை வட்டாரத்தில் சலசலப்பு.

மேலும் ஜான்வி கபூரை ஏற்கனவே தனுஷ் மற்றும் அக்க்ஷய்குமார் நடிப்பில் வெளியான அத்ராங்கி ரே என்ற படத்திற்கும் கதாநாயகியாக நடிக்க அணுகியுள்ளனர். அதற்கும் இவர் மறுப்பு கூறியிருக்கிறார் என்ற தகவலும் குறிப்பிடத்தக்கது. இதனால் திரை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.