சிவகார்த்திகேயனின் அமரன் படத்துடன் ஜெயம் ரவியின் பிரதர் படம் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே சமயத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாக உள்ள பிரதர் திரைப்படமும் தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருப்பதாக ஜெயம் ரவி ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.