Jenma Nnatchathiram
Jenma Nnatchathiram

Jenma Nnatchathiram – 🔯 ஜென்ம நட்சத்திர தினத்தன்று செய்யப்படும் வழிபாட்டால், எந்த ஒரு தெய்வமும் அருள் செய்தே தீர வேண்டும் என்பது பிரபஞ்ச இறை சட்டமாகும். இதுவே ஆன்மீக ரகசியம் ஆகும்.

🔯 ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று அர்ச்சனைகள் செய்து வழிபட வேண்டும். அவ்வாறு வழிபடுவதால் நம் துன்பங்களின் தாக்கத்தை பெருமளவு குறைத்துக் கொள்ள முடியும்.

ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரங்கள், அனைத்து வித தோஷங்களுக்கும் பரிகாரம் செய்ய உகந்த நாட்கள் ஆகும்.

விஷால் படத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா அஜித் நாயகி – சூப்பர் தகவல்!

🔯 ஜென்ம நடச்சத்திரத்தின் மகிமை:

அன்னை பார்வதிதேவி, சிவனின் கண்களை விளையாட்டாக மூடியதால் சாபம் உண்டாகி சிவபெருமானிடம் இருந்து பிரிந்து மாங்காட்டில் தவம் இருந்த பார்வதி தேவி,

இறுதியில் தனது ஜென்ம நட்சத்திர தினத்தன்று காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் மணலால் சிவலிங்கம் உருவாக்கி வழிபட்டார். இதன் பயனால் சாபம் விலகியது.

🔯 மீண்டும் சிவபெருமானுடன் இணையும் பாக்கியத்தை பெற்றார் அம்பாள். இதன் மூலம் ஜென்ம நட்சத்திரத்தின் மகிமையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

🔯 இந்த சம்பவத்தின் மூலமாக, அவரவர் ஜென்ம நட்சத்திரங்களில் செய்யும் பரிகாரங்களுக்கு பலனும் மகிமையும் அதிகம் என உணர்த்தினார் இறைவன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here