Jeethu Joseph About Ram
Jeethu Joseph About Ram

மோகன்லால் த்ரிஷா நடித்து வரும் படம் டிராப் ஆனதாக வெளியான தகவலுக்கு இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.

Jeethu Joseph About Ram : மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ராம். இந்த படத்தில் மோகன்லாலுடன் இணைந்து திரிஷா மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தை இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்குகிறார். இந்த நிலையில் படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவ தொடங்கியது.

இதனை அடுத்து இயக்குனர் ஜீத்து ஜோசப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் ராணா டகுபதிக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது – வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்!

அந்த பதிவில் தற்போது ராம் படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு இருப்பது உண்மை தான். ஆனால் கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக தான் நிறுத்தி வைத்துள்ளோம்.

நிலைமை சீரானதும் மீண்டும் பழையபடி படப்பிடிப்பு தொடங்கும். இந்த படம் உருவாகும் என அவர் விளக்கமளித்துள்ளார்.

Jeethu Joseph About Ram
Jeethu Joseph About Ram