ஜெயம்ரவியின் அடுத்த படத்தில் இணையும் நடிகை யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Jayam ravi upcoming movie update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் பூமி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நீத்து அகர்வால் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து பூலோகம் படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் ஜெயம் ரவி புதிய படம் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

‘தல’ டோனி பிறந்த நாள் : சில நிகழ்வுகள்..

இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே பிரியா பவானி சங்கர் நடித்த குருதி ஆட்டம், கசடதபற, காதலில் சந்திப்போம் போன்ற திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராகி உள்ளது அனைவரும் அறிந்ததே.

பாலிவுட் பட Shooting-கில் தனுஷ் செய்த விஷயம்! – இப்போ இதான் Trend | Atrangi Re | Dhanush, Akshay