விவாகரத்து செய்யப் போவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜெயம் ரவி.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் ஜெயம், பூலோகம் ,தனி ஒருவன், நிமிர்ந்து நில், எங்கேயும் காதல், தில்லாலங்கடி போன்ற பல படங்களில் நடிக்க தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் ஜெயம் ரவி.
இவர் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். ஆனால் தற்போது அவரை பிரியப் போவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், நீண்ட கால யோசனை மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன்.
இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டது அல்ல என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் நல் வாழ்விற்காக எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சடைந்துள்ளனர்.