Jayam Ravi Next

Jayam Ravi Next : அடங்க மறு படத்தின் வெற்றியை அடுத்து ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார்.

வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.காஜல் அகர்வால் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஜெயம் ரவி பள்ளி மாணவனாகவும் இளைஞனாகவும் நடிக்கும் இப்படத்துக்கு கோமாளி என பெயரிட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

காதலருக்காக இப்படியொரு ரிஸ்க் எடுக்கிறாரா சாய் பல்லவி – அட கொடுமையே!

மேலும் ஜூன் மாதம் இப்படம் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து ஜெயம்ரவி நடிக்கும் புதிய படத்தை அஹ்மத் இயக்குகிறார்.

தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின் படி இப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெளிநாடுகளில் தான் படமாகிறதாம். இதற்காக தற்போது இயக்குனர் அஹ்மத் தலைமையிலான குழு துருக்கியில் லொகேஷன் வேட்டை நடத்தி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.