ஜெயம் ரவியின் புதிய படமான சைரன் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் ஜெயம் ரவி. இவர் மணிரத்னம் இயக்கியுள்ள “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் எம். ராஜேஷ் உடன் இணைந்து “JR30” என தற்காலிகமாக பெயரிட்டுள்ள படத்தில் நடிகை பிரியங்கா அருள் மோகனுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.

மோஷன் போஸ்டருடன் வெளியானது ஜெயம் ரவியின் 'சைரன்'!! - உற்சாகமடைந்த ரசிகர்கள்.

இந்நிலையில் ஜெயம் ரவி மேலும் ஓர் புதிய படத்தில் நடிக்க உள்ளார். அப்படத்தை அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்கியராஜ் இயக்க இருக்கிறார். இப்படத்திற்கு “சைரன்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக இணைந்துள்ளார். ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார்.

மோஷன் போஸ்டருடன் வெளியானது ஜெயம் ரவியின் 'சைரன்'!! - உற்சாகமடைந்த ரசிகர்கள்.

இப்படத்தில் கைதி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் ஜெயம் ரவிக்கு போலீஸ் அதிகாரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். மேலும் பிரபல மலையாள நடிகையான அனுப்பாமா பரமேஸ்வரர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது இப்படத்திற்கான மோஷன் போஸ்டர் வீடியோவை படகுழு இணையத்தில் வெளியிட்டிருக்கிறது. அது தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வைரலாகி வருகிறது.

Siren - Motion Poster | Jayam Ravi, Keerthy Suresh | G.V. Prakash Kumar