Comali
ராசா உனக்கு வயசே ஆகாதாப்பா… இன்னும் அப்படியே குழந்தை மாதிரியே இருக்கயே என ஜெயம் ரவியை பார்த்து பிரபல நடிகை கேள்வி எழுப்பியுள்ளார்.

Jayam Ravi Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ஜெயம் ரவி தொடர்ந்து வித்தியாச வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள கோமாளி படத்தில் மொத்தம் 9 வேடங்களில் நடிக்க உள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ஜெயம் ரவி பள்ளி பருவ மாணவனை போல இருக்கும் போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியானது.

சிம்புவை தொடர்ந்து 15 கிலோ எடையை குறைத்த பிரபல நடிகர் – யார் தெரியுமா?

இதனை பார்த்த ஜெயம் ரவியின் அண்ணனும் இயக்குனருமான மோகன் ராஜா மோகன் ராஜா படக்குழுவையும் தம்பியையும் பாராட்டி ட்வீட் செய்திருந்தார்.

அந்த டீவீட்டை பார்த்த ஜெனிலியா உனக்கு வயசே ஆகாதா என கேள்வி கேட்டு பதிவிட்டுள்ளார். இவர் சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.