Jayam Ravi Act as Child Artist
Jayam Ravi Act as Child Artist

ஹீரோ ஆவதற்கு முன்னரே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் ஜெயம் ரவி. அந்த வீடியோவை நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ளார்.

Jayam Ravi Act as Child Artist : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் எடிட்டரும் தயாரிப்பாளருமான மோகன் அவர்களின் மகன்.

மோகன் அவர்களுக்கு மோகன் ராஜா என்ற மூத்த மகனும் ரோஜா என்ற மகளும் உள்ளார்.

மோகன் ராஜா முன்னணி இயக்குனர் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஜெயம் ரவி ஜெயம் படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.

விஜய் ரசிகர்களிடம் சிக்கிய திரௌபதி இயக்குனர்.. கிண்டலடித்தவருக்கு அவர் கொடுத்த பதிலடி.!

ஆனால் அவர் இந்த படத்திற்கு முன்பாகவே தெலுங்கில் இரண்டு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள ஒரு காட்சியை காமெடி நடிகர் சதீஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து ஹா ஹா ஹா சூப்பர் ஜெயம் ரவி என குறிப்பிட்டுள்ளார்.