Jayam Ravi 25th film : kamal Haasan, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Devar Magan

Jayam Ravi 25th film :

அடங்க மறு படத்தின் வெற்றியை அடுத்து ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார்.

வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. காஜல் அகர்வால் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஜெயம் ரவி பள்ளி மாணவனாகவும் இளைஞனாகவும் நடிக்கும் இப்படத்துக்கு கோமாளி என பெயரிட்டுள்ளனர்.

தளபதி 64 படத்தின் இயக்குனர் இவர் தான் – உறுதிப்படுத்திய சம்பவம்!

ஏற்கனவே சொன்னதுபோல் இப்படத்தில் ஜெயம் ரவி 9 கெட்டப்களில் நடிக்கிறார்.
இதை தொடர்ந்து ஜெயம்ரவி தனது 25-வது படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். லக்‌ஷ்மன் இயக்கும் இதன் படப்பிடிப்பு அண்மையில் குற்றாலத்தில் தொடங்கி உள்ளது.

இந்நிலையில் தற்போது இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது அங்கு தேவர் மகன் படத்தில் வரும் வீட்டில் இப்படத்தின் சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.