jayalalithaa
jayalalithaa

jayalalithaa  :

புதுடெல்லி : ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து கடந்த 2017 ம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் இருந்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

சபரிமலை கோயிலுக்கு பெண்கள் செல்ல முடியுமா என்ற சீராய்வு மனு இன்று விசாரணை.!

சசிகலா உறவினர்கள், பொயஸ் கார்டனில் இருந்தவர்கள், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், ஜெயலலிதா உறவினர்கள், பாதுகாவலர்கள் என பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால் விசாரணை 90 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டதாக ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இருப்பினும் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேலும் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் கோரிக்கையை ஏற்று விசாரணை நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனைடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.