Jayalalithaa Memorial Opening Function

YouTube video

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்டும் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மே 8, 2018 அன்று தொடங்கி வைத்தார். கட்டுமான பணிகள் முடிவுற்று, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். பின்னர், ஜெயலலிதாவின் நினைவிடத்தில், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் சபாநாயகர் தனபால் ஆகியோரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நூறு ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.கவை யாராலும் வீழ்த்த முடியாது என்றும், அ.தி.மு.க எஃகு கோட்டை என்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலிதா சட்ட பேரவையில் பேசியதை நினைவு கூர்ந்தார். *“வரும் சட்ட மன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஜெயலலிதாவின் ஆட்சியை தொடர செய்வதே நமது லட்சியம் என்றும், ஜெயலலிதா ஆட்சி தொடர நாம் வீர சபதம் ஏற்போம்” என்று முதலமைச்சர் சூளுரைத்தார். முதலமைச்சரின் இந்த உரைக்கு அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான அ.தி.மு.க தொண்டர்கள் கரகோஷங்களை எழுப்பி மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர். மறைந்த முதலமைச்சரின் நினைவிடம் திறப்பு நிகழ்ச்சிக்கு காலை முதலே மக்கள் வரத் தொடங்கினர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடியே நிகழ்ச்சிக்கு வந்தனர். லட்சகணக்கான மக்கள் குவிந்த்தால் மெரினா கடற்கரை பகுதியில் மக்கள் வெள்ளம் கடல் என காட்சியளித்தது. மக்கள் அனைவரும் நினைவிடத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அ.தி.மு.கவின் நிரந்த பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் நினைவிடம் என்பதால் அ.தி.மு.க தொண்டர்கள் தங்களது இதய தெய்வத்திற்கு நன்றி செலுத்தும் விதமாக நினைவிட திறப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்தனர். லட்சகணக்கான தொண்டர்களின் வருகை அ.தி.மு.கவிற்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. மேலும், அ.தி.மு.கவின் அனைத்து தொண்டர்களும் ஒற்றுமையுடன் ஒரிடத்தில் அவர்களது தலைவிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.