Jayalalitha Poes Garden House
Jayalalitha Poes Garden House

Jayalalitha Poes Garden House – சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை அரசு செலவில் அவரின் நினைவிடமாக மாற்றுவதற்கு எதிரான வழக்கில்,

இன்னும் 2 நாட்களில் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

“சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த இவ்வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது”. இதன் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கூறுகையில், “ஜெயலலிதா மறைந்த பிறகு அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை அரசு செலவில், அரசு நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தொடர்பாக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது ஒரு சட்ட விரோத செயலாகும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

ஏனெனில், ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி தண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டவர்.

மேலும் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி, அந்த சொத்தில் சசிகலா மற்றும் இளவரசிக்கும் பங்கு உள்ளது. எனவே இந்த இல்லத்தை நினைவிடமாக மாற்ற கூடாது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனால் இந்த மனுவை பொருத்த வரையில், போயஸ் கார்டன்- ஐ அரசு ஜெயலலிதா நினைவு இல்லமாக அரசு செலவில் முயற்சித்தால், அது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று வழக்கில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள் 2 வார காலம் வழக்கை ஒத்திவைத்து அதற்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here