Jayalalitha Biopic Kangana Ranaut
Jayalalitha Biopic Kangana Ranaut

Jayalalitha Biopic Kangana Ranaut : தமிழில் தற்போது பயோபிக் படங்கள்தான் டிரெண்ட். அந்தவகையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை மட்டுமே மூன்று பேர் படமாக்கி வருகிறார்கள்.

இதில் ஒரு படத்தை விஜய் இயக்குகிறார். தலைவி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார்.

இதற்காக இவருக்கு இந்தியாவில் இதுவரை எந்த நடிகைக்கும் பேசப்படாத சம்பளம் பேசப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவிற்கு சிலை அமைக்க தடை இல்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்நிலையில் ஜெயலலிதா கதாபாத்திரத்திற்காக அவருடைய உடல் மொழியை கற்றுவரும் கங்கனா, சொந்த குரலில் டப்பிங் பேசுவதற்காக தமிழும் கற்று வருகிறாராம்.

பொதுவாக பாலிவுட் நடிகைகள் தமிழில் டப்பிங் பேசும்போது அது நெகடிவாகத்தான் முடிந்திருக்கிறது. சில சமயங்களில் அதுவே படத்தின் தோல்விக்கு காரணமாகவும் அமைந்திருக்கிறது.

கருத்து வேறுபாட்டால் கணவரை விவாகரத்து செய்யும் பிரியங்கா சோப்ரா?

அப்படியிருக்க கங்கனா தற்போது டப்பிங் பேச துணிந்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. இதுபோக இந்த படத்துக்காக பரதநாட்டியமும் பயில கங்கனா திட்டமிட்டுள்ளாராம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.