jayalalitha and Edappadi Palanisamy : Political News, Tamil nadu, Politics, BJP, DMK, ADMK, Latest Political News, India, jayalalitha

jayalalitha and Edappadi Palanisamy :

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வழியில் அதிரடிக்கு மாறியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டனை நீக்கி முதல்முறையாக அமைச்சரவையில் மாற்றம் செய்துள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக, எந்த ஒரு அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுத்ததில்லை.

முதலில் கட்சி மற்றும் ஆட்சியை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முயற்சித்து, அதில் ஓரளவு வெற்றியும் அடைந்தார்.

மேலும் சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றியடைந்து முதல்வர் பதவியை தக்கவைத்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஆட்சி அதிகாரம் முதல்வர் பழனிச்சாமியின் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் ஆரம்ப காலத்தில் சசிகலாவின் ஆதரவாளராக இருந்த மணிகண்டன், அதிமுக உடைந்த பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக மாறினார்.

மேலும் கடந்த 3 ஆண்டுகளாக தகவல்தொழில்நுட்ப துறை அமைச்சராக மணிகண்டன் இருந்தார். இந்நிலையில் திருவாடணை தொகுதியில் மணிகண்டன் – கருணாஸ் இருவருக்கும் இடையே தகராறு நிலவி வருவதாக கூறப்படுகிறது.

ராமதாஸ் குறித்த திமுக தலைவர் ஸ்டாலின் கருத்துக்கு, முதல்வர் விமர்சனம்!

அத்துடன் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனுடன் அமைச்சர் மணிகண்டன் மோதலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கேபிள் டிவி கார்ப்பரேசன் தலைவராக உள்ள உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு 2லட்சம் கேபிள் டிவி இணைப்புகள் உள்ளதாகவும்.

அதை ஏன் அரசு கேபிளில் இணைக்க வேண்டும்? என்றும் ஊரெல்லாம் கேபிளை இணைக்க கூறும் அவர் இதை செய்து முன்னுதாரணம் ஆகலாமே.

என்றும் மணிகண்டன் பேசினார். இத்துடன் முதல்வர் கேபிள் கட்டணத்தை குறைப்பது பற்றி அந்ததுறையின் அமைச்சரான தன்னுடன் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை என்றும் கூறினார்.

இந்நிலையில் அமைச்சர் மணிகண்டனின் பேட்டிகளை பார்த்த முதல்வர் பழனிச்சாமி நேற்று இரவு அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டனை அதிரடியாக நீக்கியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் பழனிச்சாமியின் பரிந்துரையை ஏற்று மணிகண்டனை தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி ஆளுநர் உத்தரவிட்டார்.

கடந்த 2 ஆண்டுகளில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எந்தவொரு அமைச்சர்கள் மீதும், எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை.

முதல்முறையாக ஜெயலலிதா வழியில் அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டனை அதிரடியாக நீக்கியிருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது..

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.