Jaundice

Jaundice : மஞ்சள் காமாலை இருந்தால் தப்பி தவறி கூட பின் வரும் செயல்களை செய்து விடாதீர்கள்.

மஞ்சள் காமாலை:

உடலில் பித்தம் அதிகமாவதாலும்,ரத்த சிவப்பணுக்கள் அழிவதினாலும்.பிலிருஃபின் அளவு அதிகமாக காணப்படும் போதும் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. மஞ்சள்காமாலை ஒருவகை வைரஸ் நோயாகும்.

அறிகுறிகள்:

உடல் சோர்வு ,உடல் அரிப்பு ,வாந்தி ,பசியின்மை, காய்ச்சல், சிறுநீர் மஞ்சள் நிறத்தில் கழித்தல் ,கண்களில் வெண்படலம் மஞ்சள் நிறமாக மாறுதல்.

தவிர்க்க வேண்டியவை:

அசைவ உணவுகளை தவிர்த்தல் வேண்டும்.

எண்ணெய், நெய்யால் ஆன பொருட்களை தவிர்த்தல் வேண்டும்.

காரம் அதிகமான பொருட்களையும், பண்டங்களையும் தவிர்த்தல் வேண்டும்.

மஞ்சள் காமாலையை விரட்டும் கீழாநெல்லி கசாயம்:

தேவையான பொருட்கள்:

1. கீழாநெல்லி =50 கிராம்
2. சோம்பு. =1ஸ்பூன்
3. மிளகு. = 1ஸ்பூன்
4. சுக்கு. =சிறுதுண்டு
5. மஞ்சள் தூள். =1/2ஸ்பூன்
6. பூண்டு. = 4பல்
7.நீர். =1டம்பளர்

செய்முறை:

பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர் ஊற்றி, கொதித்த உடன் கொடுத்திருக்கும் அனைத்து பொருள்களையும் ஒன்றாக சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

நன்கு கொதித்த உடன் அதனை வடிகட்டி பருக வேண்டும்.

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டோர் வீட்டிலிருந்தபடி இந்த சிகிச்சையை மேற்கொள்வது சிறப்பு.

மருத்துவரின் ஆலோசனை மிக முக்கியமானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here