Jason Vijay Tweet : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, Kollywood , Tamil Cinema, Latest Cinema News

விஜயின் மகன் சஞ்சயின் புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது, இதனால் அவர் தளபதி 63 படத்தில் நடிக்கிறாரா என்ற குழப்பமும் எழுந்துள்ளது.

Jason Vijay Tweet :

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங் தளபதி விஜய். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஹேஸ்டேக்க்குடன் தளபதி விஜயின் சஞ்சய் பெயரில் புகைப்படம் ஒன்று ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நயன்தாரா பாடலை அழகாக பாடும் துருவ் விக்ரம் – அப்படியே ஜோடியும் சேருவாங்களோ?

அந்த பதிவில் வைட்டிங் பார் டப்பிங் என குறிப்பிட என்னது தளபதி 63-ல் விஜயின் மகனும் நடிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் ஏற்கனவே விஜய் தரப்பில் இருந்து ஒருமுறை அறிக்கை ஒன்று வெளியாகி இருந்தது. அதில் விஜயின் மகன் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என எதிலும் இல்லை. அவர் பெயரில் பதிவாகும் தகவல்களை நம்ப வேண்டாம் என கூறப்பட்டு இருந்தது.

இதனால் இதுவும் பேக் ஐடியில் பதிவான பதிவாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அல்லது அவர் நடிக்கும் புதிய குறும்படத்திற்கான டப்பிங்காக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.