ஜப்பான் திரைப்படத்தின் introduction வீடியோ அப்டேட் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. இவர் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து தற்போது ஜப்பான் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ராஜ் முருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கதாநாயகியாக நடிகை அனு இமானுவேல் நடித்திருக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி இருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த நிலையில் நேற்று நடிகர் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஜப்பான் திரைப்படத்தின் சிறு முன்னோட்டத்தின் வீடியோவை வெளியிட்டு இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்பதையும் அதிகாரவபூர்வமாக தெரிவித்திருந்தது. அதன் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒரே நாளில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இந்த மகிழ்ச்சியான செய்தியை படக்குழு ஒரு சிறப்பு வீடியோவை பதிவிட்டு ஜப்பான் படத்தின் அறிமுக டீசர் 10 மில்லியன் இதயங்களை கவர்ந்துள்ளது என்று குறிப்பிட்ட வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.