இதுவரை ஜாதி பெயரை வைத்து பெயரை குறிப்பிட்டு இருந்த ஜனனி ஐயர் தற்போது தன்னுடைய பெயரில் இருந்து ஜாதியை நீக்கியுள்ளார்.

Janani Iyer in New Name : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஜனனி ஐயர். பல படங்களில் நடித்துள்ள இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஜனனிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஜாதியினை மறந்த ஜனனி.. பாராட்டி தள்ளும் ரசிகர்கள்.!!

தற்போது வரை ட்விட்டர் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் என்ற சமூக வலைதளம் அனைத்திலும் ஜனனி அய்யர் என தன்னுடைய ஜாதி குறித்த அடைமொழியோடு பெயரை குறிப்பிட்டு வந்தார்.

இந்த நிலையில் தற்போது மாற்றம் ஒன்றே மாறாதது எனக்கூறி தமிழை பெயரிலிருந்தே ஜாதியை நீக்கி உள்ளார். மேலும் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம் என தெரிவித்துள்ளார். பெயரிலிருந்து ஜாதியை தூக்கிய ஜனனிக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

ஜாதியினை மறந்த ஜனனி.. பாராட்டி தள்ளும் ரசிகர்கள்.!!