Janaki Ammal Clarification on Fake News
Janaki Ammal Clarification on Fake News

பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மாள் உயிரிழந்ததாக தகவல் பரவியதை அடுத்து அது வதந்தி என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Janaki Ammal Clarification on Fake News : தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் பின்னணி பாடகியாக பல ஆயிரம் பாடல்களை பாடியிருப்பவர் ஜானகி அம்மாள்.

இவர் உடல்நலக் குறைபாடு காரணமாக உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் திடீரென தகவல் பரவி ரசிகர்களையும் திரையுலக பிரபலங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பள்ளிகளை திறப்பது எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட தகவல்!

ஆனால் இது முழுக்க முழுக்க வதந்தி என தெரிய வந்துள்ளது. ஆபரேஷனுக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட ஜானகி அம்மாள் தற்போது அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தன்னைப் பற்றிய பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

ஜானகி அம்மாள் நலமுடன் இருப்பதாக வெளியான தகவல்களை அடுத்து அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் அவர் பூரண குணமடைய இறைவனை வேண்டி வருகின்றனர்.