Jammu Kashmir Military
Jammu Kashmir Military

Jammu Kashmir Military : ஜம்மு காஷ்மீரில் இருந்து 10 ஆயிரம் படை வீரர்களை உடனடியாக திரும்பப் பெறுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்தது. மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்கள் ஆக மத்திய அரசு பிடித்தது.

இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக கூடுதல் படைவீரர்களை மத்திய அரசு குறித்தது.

இன்னும் 5 வருடத்தில் 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்!!! நெசமாவா??… வாயை பிளந்த பட்டதாரிகள்!

தற்போது ஜம்மு-காஷ்மீரில் நிலவிவரும் பாதுகாப்பு சூழலை மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்தபின் மத்திய ஆயுத காவல் படையைச் சேர்ந்த 100 படைப்பிரிவுகளை திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

இதன் மூலமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களின் எண்ணிக்கை சுமார் 60,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்றே கடந்த மே மாதத்தில் ஜம்மு காஷ்மீரில் இருந்து ஆயிரம் வீரர்கள் மத்திய அரசு திரும்பப் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.