தாமரை செல்விக்காக வீடு கட்டித் தர முடிவு செய்துள்ளார் பிரபல இசையமைப்பாளர் ஒருவர்.

James Vasanth Help to Thamarai Selvi : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் 5 வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நாட்டுப்புறக் கலைஞர் தாமரைச்செல்வி. குடும்ப கஷ்டத்தின் காரணமாக தெருக்கூத்து ஆட்டங்களில் நடனமாடி அதன் மூலம் தன்னுடைய குடும்பத்தை நடத்தி வருகிறார். இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

தாமரை செல்விக்காக வீடு கட்டித்தரும் பிரபல இசை அமைப்பாளர்.. யார் தெரியுமா? பாராட்டித் தள்ளும் ரசிகர்கள்

இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய குடும்பம் பற்றியும் வறுமை குறித்து பலமுறை பேசியுள்ளார் தாமரைச்செல்வி. இதையெல்லாம் கேட்ட இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் தாமரைச்செல்வி வீடு கட்டித்தர நன்கொடை அளிக்க அவரது ரசிகர்கள் முன்வர வண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தற்போது தாமரை செல்விக்காக வீடு கட்டும் கட்டுமான வேலைகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

தாமரை செல்விக்காக வீடு கட்டித்தரும் பிரபல இசை அமைப்பாளர்.. யார் தெரியுமா? பாராட்டித் தள்ளும் ரசிகர்கள்

விரைவில் அந்த வீடு தாமரைச்செல்வியிடம் ஒப்படைக்கப்படும் என தகவல் கிடைத்துள்ளன. இந்த விஷயம் அறிந்த ரசிகர்கள் பலரும் ஜேம்ஸ் வசந்த் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.