James Cosmo About Jagame Thandiram

தனுஷ் ஜகமே தந்திரம் படம் பற்றி ஹாலிவுட் நடிகர் பதிவிட்டுள்ள பதிவு இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

James Cosmo About Jagame Thandiram : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர உள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ள இந்த படம் ஜூன் 18-ஆம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ நடித்துள்ளார். இவர் தற்போது இந்த படம் பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அதாவது இந்தியாவில் சிறப்பான படத்திற்காக நேரத்தை செலவிட்ட தே மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவில் பல நம்ப முடியாத திறமையான நடிகர்கள் உள்ளார்கள். இந்தியா ஒரு அற்புதமான நாடு. ஜகமே தந்திரம் திரைப்படத்திற்காக ஆவலோடு காத்திருப்பதாக பதிவிட்டுள்ளார்.

ஹாலிவுட் நடிகர் தமிழ் படத்தைப்பற்றி பதிவிட்ட இந்த பதிவு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் இந்த பதிவை சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.