Jaipur Pink Panthers : Sports News, Latest Sports News, India, Sports, Latest Sports News, TNPL 2019, TNPL Match 2019, Pro KabaddiLeague

Jaipur Pink Panthers :

புரோ கபடி போட்டி தொடர் கடந்த 4 வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய போட்டியில் ஜெய்ப்பூர் மற்றும் புனே அணிகள் மோதின. இந்த போட்டியில் ஜெய்ப்பூர் அணி ஆரம்பத்திலிருந்து ஆதிக்கம் செலுத்தி வந்தது.

ஜெய்ப்பூர் அணி வீரர்கள் ரெய்டில் மட்டும் அதிக புள்ளிகளை எடுத்து முன்னேறினர். இறுதியில் ஜெய்ப்பூர் அணி 33 புள்ளிகளும், புனே அணி 25 புள்ளிகள் எடுத்ததால் 8 புள்ளிகள் வித்தியாசத்தில் ஜெய்ப்பூர் அணி வெற்றி பெற்றது.

திருஷ்டிக்காக பயன்படுத்தப்படும் படிகாரத்தில், இவ்வளவு மருத்துவ குணங்களா? தெரிந்து கொள்வோமா!.

நேற்றைய போட்டியின் முடிவில் புள்ளிகளின் அடிப்படையில் டெல்லி அணி 26 புள்ளிகள் எடுத்து முதலிடத்தில் உள்ளது. பெங்கால் அணி 25 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் ஜெய்பூர் அணியும் 25 புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடத்திலும் உள்ளன.

பெங்களூர் அணி 22 புள்ளிகளும், ஹரியானா 21 புள்ளிகளும், தமிழ் தலைவாஸ் 20 புள்ளிகள் எடுத்து நான்காவது, ஐந்தாவது, ஆறாவது இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மும்பை – பாட்னா அணிகளும், குஜராத் – ஜெய்ப்பூர் அணிகளும் மோதவுள்ளன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.