நடிகர் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வைரலாகி வருகிறது.

இந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

ரஜினியின் ஜெயிலர்… ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வைரல்!.

தற்போது ஜெயிலர் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு காட்சிகள் சென்னை புறநகர் பகுதிகளான கிழக்கு கடற்கரை சாலை, எண்ணூரில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்போது வரை படப்பிடிப்பு பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்திருக்கும் நிலையில் இப்படத்திற்கான ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியின் ஜெயிலர்… ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வைரல்!.

அதாவது, நடிகர் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தை 2023, ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்த அதிகாரிவபூர்வமான அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.